பிஞ்சு கைகளிலே காகிதம் படகாய் மாறி கடலாகி போன மழை நீரில் மிதக்க தயாராய் விட்ட படகு மெல்லிய காற்றின் திசையில் செல்ல தன் கண்டுபிடிப்பின் வெற்றியை குழந்தை ரசிக்க வந்தது எங்கிருந்தோ மழை விழியோரம் கண்ணீர் நெஞ்சிலோ சொல்லமுடியாத வலி தன் முன்னே தன் படகு தண்ணீரில் முங்குவதை காண சகிக்க முடியாத குழந்தைக்கு ஆனால் காகித படகோ வாழ்க்கை தத்துவத்தை மிக எளிதாக புரிய வைத்தது அருகில் நின்று அதை பார்த்து
கொண்டிருந்த வாலிபனுக்கு..
உன் நினைவுகளின் அழுகைக்குள் என் நினைவுகள் தண்டவாளத்தில் பயணிப்பதுபோல் திருப்பங்களில்லாத பயணங்களில் இணையவேண்டிய இடம் வரை இரட்டையாகவே ஓடிக்கொண்டிருக்கின்ற தெருக்களில் சொல்லிக்கொள்ளாத மௌனம் இறங்குதலும் ஏறுதலுமான பயணங்களில் மீண்டும் ஒரு முறை சந்திக்க நேரலாம் அப்பொழுதாவது சொல்லி விடு பதில் தெரியாத கேள்விகளுக்குத்தான் நீண்ட அர்த்தங்கள் ஏதாவது சொல்லி விடு மௌனித்து விடாதே உன் மௌனத்துக்குப் பின் மீண்டும் ஒரு சந்திப்புக்காக நான் காத்திருக்க நேரலாம்
நான் யாருக்கேனும் எழுதும்
வரிகளிலும் உனக்கான
வார்த்தைகள் இருக்கும்
நீ யாருக்கேனும் இசைக்கும்
கானத்திலும் எனக்கான
இதமிருக்கும்
அடையாளம் காணும்
ஆழ் பரப்பில்
அர்த்தப்படுகின்றன எல்லா வரிகளும்
எல்லோருக்குமான பாடல்களும்.